நீர்வரத்து அதிகரிப்பு: மேகமலை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
நீர்வரத்து அதிகரித்ததால் மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது
கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த அருவி உள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டு செல்கின்றனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் அதற்கு தகுந்தாற் போல் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை என சுற்றுலா பயணிகள் புகார் கூறி வருகின்றனர். இதனால் அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேலும் வனத்துறையினருடன் இணைந்து மயிலாடும்பாறை போலீசாரும் அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.