மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,200 கனஅடியாக அதிகரிப்பு

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 33-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

Update: 2022-11-14 04:13 GMT

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 20,200 கன அடியாக அதிகரித்து உள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 15,200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 20,200 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையும் அதே நிலை நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 20 ஆயிரம் கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 33-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அணை பகுதியில் 3.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்