மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,910 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 13 ஆயிரத்து 910 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Update: 2022-10-03 04:20 GMT

மேட்டூர்,

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 11 ஆயிரத்து 172 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது.

இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 13 ஆயிரத்து 910 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 118.75 அடியாக இருந்த இன்று காலை 8 மணிக்கு 118.65 அடியாக சரிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்