களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-03 19:33 GMT

களக்காடு:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

களக்காடு தலையணை

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தால் தலையணை தண்ணீர் இன்றி வறண்டது. மரம் செடி கொடிகளும் மழை இன்றி காய்ந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.

இதையடுத்து களக்காடு தலையணை கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடியும் மூடப்பட்டது.

குளிக்க அனுமதி

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து தலையணையில் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் தலையணையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்