கடனாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மழை காரணமாக கடனாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
கடையம்:
கடையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணை நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளது. எனவே கடனாநதி கரையோர மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படியும், இரவில் யாரும் கடனாநதியில் இறங்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.