நீர்வரத்து அதிகரிப்பு - குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-09-12 04:34 GMT

தென்காசி ,

குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்தருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்