பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

கனமழை காரணமாக பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2022-09-06 17:24 GMT

பாலக்கோடு:

கனமழை காரணமாக பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சின்னாறு அணை நிரம்பியது

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை தளி மற்றும் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் சின்னாறு மற்றும் வனப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையினர் அறிவுறுத்தல்

இதன் காரணமாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்தது. சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்