மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-18 13:23 GMT

சேலம்,

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மழையளவு குறைந்த நிலையில், அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, டெல்டா பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. குருவை சாகுபடிக்காக அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்