பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கட்டாயமாக பொதுமக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தியும், மாவட்டத்தில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை.இதனை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி இருந்தனர். 249 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.