கடலை எண்ணெய் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
வத்தல்
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.7 ஆயிரம் ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.10,600 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.10 ஆயிரம் ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.9,800 வரையிலும் விற்பனையானது.
துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ முடைக்கு ரூ.10 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.3,800 முதல் ரூ.3,900 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. முண்டு வத்தல் ரூ.3 ஆயிரம் விலை குறைந்து ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
கடலை எண்ணெய்
கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.3,150 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6,435 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20 விலை உயர்ந்து ரூ.1,520 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.
நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.5,100 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,300 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,740 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனையானது.
பொரிகடலை 50 கிலோ ரூ.3,900 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,310 ஆகவும், இரண்டாம் ரகம் ரூ.3,600 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,460 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.960 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,650 ஆகவும் விற்பனை ஆனது.
பட்டாணி பருப்பு
பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.9,500 ஆகவும் விற்பனையானது.
காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.3,100 விலை குறைந்து ரூ.18,500 ஆகவும், ஏ ரகம் ரூ.2,500 விலை குறைந்து ரூ.19,000 ஆகவும், சி ரகம் ரூ.1,500 விலை குறைந்து ரூ.18,000 ஆகவும், ரோபஸ்டா பிபிரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.500 விலை உயர்ந்து ரூ.8,500 ஆகவும் விற்பனையானது.