மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-07 03:54 GMT

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது, பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 85.16 அடியிலிருந்து 84.34 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 142 கன அடியிலிருந்து வினாடிக்கு 226 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 46.41டி.எம்.சி ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்