அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு

கம்பத்தில் அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது

Update: 2023-06-25 19:00 GMT

தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லை பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் அமைந்துள்ளது. இதனால் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விளையக்கூடிய மா, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் கேரள மாநில காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் விளையக்கூடிய ஆரஞ்சு, பலா, அன்னாசி உள்ளிட்ட பழங்கள் கம்பம் பகுதியில் உள்ள உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தை பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கம்பம் பார்க்ரோடு பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜீப் மற்றும் லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இது குறித்து கேரள வியாபாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு அன்னாசி பழம் வரத்து குறைவாக இருந்ததால் கிலோ ரூ.60 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.35-க்கும், 3 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்