கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-24 04:13 GMT

ஒகேனக்கல்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11 ஆயிரத்து 720 கன அடியாக அதிகரித்து உள்ளது.

கிருணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து நேற்று 11 ஆயிரத்து 574 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபிரி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியாக உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்