ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தானியங்கள் வரத்து அதிகரிப்பு

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தானியங்கள் வரத்து அதிகரிப்பு ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு தானியங்கள் விற்பனை

Update: 2023-01-27 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் செயல்பட்டு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வரத்து வந்தன. நெல் ஒரு மூட்டை அதிகபட்ச விலை ரூ.1,810 ஆகவும் குறைந்தபட்ச விலை ரூ.1,369 ஆகவும் இருந்தது. அதேபோல் மணிலா அதிகபட்சம் ரூ.8,759 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.8,109 ஆகவும், எள் அதிகபட்சம் ரூ.12,139 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.10,629 ஆகவும், உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.7,069 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.6,869 ஆகவும், மக்காச்சோளம் அதிகபட்சம் ரூ.2,252 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.2,196 ஆகவும், நாட்டு கம்பு அதிகபட்சம் ரூ.6,967 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.6,800 ஆகவும் இருந்தது.

இது தவிர பச்சைப்பயிர் அதிகபட்சமாக ரூ.7,410 ஆகவும். குறைந்தபட்சம் ரூ.5,889 ஆகவும், கேழ்வரகு ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.2,451 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.2,099 ஆகவும், மக்காச்சோளம் அதிகபட்சம் ரூ.2,252 ஆகவும், குறைந்தபட்சம் ரூ.2,196 ஆகவும் இருந்தது. இது தவிர தட்டைப்பயிர், திணை போன்ற தானியங்கள் மற்றும் தேங்காய் வரத்தும் அதிகம் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 812 மெட்ரிக் டன் தானியங்கள் விற்பனை நடைபெற்றது. இதன் மூலம் ரூ.3 கோடியே 14 லட்சம் அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்துக்கது.

Tags:    

மேலும் செய்திகள்