மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,466 கனஅடியாக அதிகரிப்பு

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Update: 2023-02-04 14:06 GMT

மேட்டூர்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று 1,454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,466 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.72 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 103.73 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்