மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 991 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 1,155 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.