அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - கல்லூரி கல்வி இயக்குனரகம் தகவல்

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-03 11:16 GMT

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதில் 45 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து 259 மாணவிகளும் அடங்குவர். மேலும் 9 ஆயிரத்து 76 இடங்கள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்த அளவில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்