பருத்தி விலை உயர்வு
இடையக்கோட்டை பகுதியில் பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை விற்றது. தற்போது பருத்தி வரத்து குறைவானதாலும், உள்நாட்டில் பருத்தி தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் தரத்திற்கேற்ற வகையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை ஈரோடு மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பருத்தி விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.