ஷூ கம்பெனியில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆம்பூர் அருகே ஷூ கம்பெனியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2023-01-19 17:05 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஏ கஸ்பா பகுதியில் தனியார் ஷூ கம்பெனிகள் இயங்கி வருகிறது. ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளிகள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சுமார் 6 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஷூ கம்பெனியில் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் கம்பெனியின் கதவை பூட்டி சாவிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். மேலும் நிறுவன மேலாளர்களின் செல்போன்களையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலாளர்கள் மூலம் தகவல்கள் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவி பொருத்தி நிறுவனங்களில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள பிரபல ஷூ தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் 5 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்