ஆம்பூர் பிரபல ஷூ தொழிற்சாலையில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
ஆம்பூரில் பிரபல ஷூ தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.;
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பரிதா குழுமத்தில் இன்று 3-வது நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரிதா குரூப்பில் உள்ள தோல் தொழிற்சாலைகள் ஷூ கம்பெனியின் ரூ. 1600 கோடி மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித்துறைக்கு வரி செலுத்துள்ளதா என 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட பரிதா ஷூ கம்பெனியின் ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தனர்.
அலுவலகத்தில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி நிர்வாக மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போன்று ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தனியார் ஷூ கம்பெனியில் ஜாப் ஒர்க் செய்து வந்த பரிதா குழுமத்தின் கணக்கு மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தொடந்து 3-வது நாளாக நடந்து வருகின்றது.