வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை

வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-15 18:39 GMT

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரை. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 12-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதேபோல இந்த சோதனை நடைபெற்ற போது அவருடன் தொடர்புடைய மற்ற இடங்களிலும் என மாவட்டத்தில் பல இடங்களில் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனையிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்அடிப்படையில் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்