சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.;
சென்னை,
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடப்பது வழக்கம்.
இந்த நிலையில், சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.