கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-23 04:44 GMT

கரூர்,

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் சோதனை நீடித்தது.

இந்த நிலையில், கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் - ஈரோடு சாலை கோதை நகர் பகுதியில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 5 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்