சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரி சோதனை
திருச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை
திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இந்த அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
பத்திரப்பதிவு
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, இது ஆண்டுதோறும் வழக்கமாக நடத்தப்படும் சோதனை தான். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சோதனை நடத்தப்படவில்லை. தற்போது, மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் அதிக அளவு நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளனரா? என்பது குறித்து அறிய இந்த சோதனை நடைபெற்றது, என்றனர்.
இந்த சோதனை மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு வரை நீடித்தது.