தமிழகத்தில் கொலை,கொள்ளை, திருட்டு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது - எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்ச்சியுள்ளார்.

Update: 2023-04-30 08:17 GMT

சேலம்,

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக விமர்ச்சியுள்ளார்.

அவர் பேசியதாவது,

அதிமுக ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி. அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர் அல்லது கட்சியின் உயர் பொறுப்புக்கு செல்லமுடியும், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 24 மாதங்கள் ஆகியும், சேலம் மாவட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை இவ்வாறு, நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி நடக்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து தமிழ்நாடு கொலைக்களமாக மாறி வருகிறது. திமுக ஆட்சியில் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன, என்றும் முன்னதாக திருமண மண்டபங்களில் மது பரிமாறலாம் என்ற உத்தரவை அதிமுக கண்டித்த பிறகுதான் திருமண மண்டபங்களில் மது பரிமாறுவதற்கான உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்