தீக்குளிக்க முயன்ற சம்பவம்:பள்ளி மாணவி-தாய் மீது வழக்கு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பள்ளி மாணவி, அவரது தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-03-28 18:45 GMT

தேனி அருகே ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவருடைய தாயாரும் உடன் வந்திருந்தார். போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக அந்த மாணவி கூறினார். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி மீதும், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய தாய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்