கோத்தகிரி பகுதியில் தொடர் மழை:குஞ்சப்பனை அரசு பள்ளியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
கோத்தகிரி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குஞ்சப்பணை அரசு பள்ளியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குஞ்சப்பணை அரசு பள்ளியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
தொடர் மழை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு ஆங்காங்கே லேசான மண் சரிவுகள் ஏற்பட்டு வருவதுடன் இரு சில இடங்களில் வீடு இடிந்து சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக மழையோடு கடு்ம் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தடுப்புச்சுவர் இடிந்தது
இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு கோத்தகிரி பகுதியில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் நிலத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் தடுப்புச் சுவரைப் புதுப்பிக்க சம்பந்தபட்ட துறையினருக்கு பரிந்துரை செய்தனர்.
மேலும் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.