தொடர் மழை: சென்னையில் 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னையில் கனமழை காரணமாக 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-20 02:54 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலை காணப்படுகிறது.

கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாக கிளம்பியது, ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

இந்த நிலையியில், தொடர் மழையின் காரணமாக சென்னையில் 2-வது நாளாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை - சென்னை மற்றும் சென்னை - இலங்கை செல்லும் 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை - சென்னை ஏர் இந்தியா விமானமும், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் தாமதமாக புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ரன்வே பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்