கரும்பு அரவை பருவத்திற்கு ஊக்கத்தொகை ரூ.500

2022-23-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Update: 2023-01-05 18:45 GMT

விழுப்புரம்:

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பரமசிவம் வரவேற்றார்.

இதில் நிர்வாகிகள் கலிவரதன், ராஜாராமன், வெங்கடசாமி, தண்டபாணி, பாண்டியன், பாலாஜி, கோபாலகிருஷ்ணன், ரங்கநாதன், நாராயணன், சக்திவேல், பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், நடராஜன், மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

இக்கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.195-ஐ விவசாயிகளுக்கு வழங்கிய தமிழக முதல்-அமைச்சர், உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, 2022-23-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு அறிவிக்கும் ஊக்கத்தொகையை ரூ.500 வழங்க வேண்டும், 2022-23 கரும்பு அரவை பருவத்திற்கு மத்திய, மாநில அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வயல் விலையாக வழங்க வேண்டும், ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் அள்ளிச்செல்ல அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு கட்டும் தடுப்பணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, விளைநிலங்களையும், கரும்பு பயிர்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையின் 9 கோட்டங்களில் அனுமதி வழங்கியுள்ளதைப்போல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்