30-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை
சங்கராபுரத்தில் 30-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பேரூராட்சி அறிவித்துள்ளது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சங்கராபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் சொத்துவரியை வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தும் பட்சத்தில், அவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.