பிளஸ்-2 சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
பா.ஜனதா சார்பில் பிளஸ்-2 சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் நெல்லை வடக்கு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் கவுரவப்படுத்தப்பட்டனர். முதலிடம் பிடித்த அயன்சிங்கம்பட்டி சண்முகராஜ், 2-வது இடம் பிடித்த மகிழ்வண்ணநாதபுரம் மாணவி காந்திமதி, 3-வது இடம் பிடித்த வல்லான்கோட்டை மாணவி பார்வதி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, ஊக்கத்தொகையும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா பட்டியல் அணி மாநிலத்தலைவர் பொன்ராஜ் தலைமையில் துளசிபாலா, பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் சுப்புலட்சுமி, பாளையங்கோட்டை மண்டல தலைவர் சுடலை, மாவட்ட செயலாளர்கள் சிபு கணேஷ், மாரி செல்வம், அயன்சிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.