தண்ணீர் பந்தல் திறப்பு விழா
பரப்பாடியில் நாம் தமிழா் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இட்டமொழி:
பரப்பாடியில் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகபெருமாள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நெல்லை கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மாவட்ட செயலாளர் நெல்லை ஜெயசீலன், நாங்குநேரி மேற்கு ஒன்றிய தலைவர் லிப்டன் பிரபுபாண்டி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் இரணியவர்மன், நிர்வாகிகள் ரமேஷ், தாமரைகுளம் மாரிமுத்து, சின்னத்துரை, சுடலை, கிருஷ்ணன், சாமுவேல், சரவணன், சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.