அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கவிழா

நாட்டறம்பள்ளி அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது.;

Update: 2022-11-28 17:43 GMT

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 6,7,8 மாணவர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறிவு திறனை மேம்படுத்துவதற்கான, தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ள வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சா.இளங்கோ தலைமை தாங்கினார். உதவித்தலைமை ஆசிரியர்கள் சி.வேல்முருகன், பி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, நடராசன், சுதாதேவி, கோபி ஆகியோர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தெளிவாக கற்பதன் மூலம் எதிர்கால மனித வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமையும் என்பதை மாணவர்களுக்கு விளக்கினர். ஆசிரியர்கள் சி.ரவிவர்மன், சா.பெருமாள். எம்.பாலமுருகன், எம்.விஜயகுமார், எம்.சவுமியா, நாகலட்சுமி, மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்