ரூ.26 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா

தனக்கர்குளம் பஞ்சாயத்தில் ரூ.26 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது

Update: 2022-10-28 21:06 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் தனக்கர்குளம் பஞ்சாயத்து தனக்கர் குளத்தில் 9.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், சிவசுப்பிரமணியபுரத்தில் 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாணிக்கம்புதூரில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி அந்தந்த இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், தனக்கர்குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்