சிதம்பரத்தில்புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்சப்-கலெக்டர் சுவேதா சுமன் திறந்து வைத்தார்

சிதம்பரத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை சப்-கலெக்டர் சுவேதா சுமன் திறந்து வைத்தார்.

Update: 2023-04-11 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் 1-வது வார்டு பழைய புவனகிரி சாலையில் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு சிதம்பரம் சப்- கலெக்டர் ஸ்வேதா சுமன் கலந்து கொண்டு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் வெற்றிச்செல்வன், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிராஜுதீன், சுரேஷ் குமார், முத்துக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சரித்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்