ரூ.1¾ லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு
கடையநல்லூரில் ரூ.1¾ லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி 2-வது வார்டு கற்பகசுந்தர விநாயகர் கோவில் தெருவில் வேளார் சமுதாய மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி, வடக்கத்தி அம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கவுன்சிலர் பூங்கோதை கருப்பையாதாஸ் மூலம் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மானிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் 2 பணிகளுக்கும் ரூ.1¾ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போது, இந்த பணிகள் நிறைவடைந்து குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது.
நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலையில், கவுன்சிலர் பூங்கோதை கருப்பையாதாஸ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.