பொட்டலில் ஆயத்த ஆடை சிறுதொழில் தொகுப்பு மையம் திறப்பு

பொட்டலில் ஆயத்த ஆடை சிறுதொழில் தொகுப்பு மையத்தை கலெக்டர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.

Update: 2023-09-20 20:19 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் பொட்டல் பஞ்சாயத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஆயத்த ஆடை சிறு தொழில் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, சிறுதொழில் தொகுப்பு மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்னர் அவர் பேசுகையில், ''பொட்டல் பஞ்சாயத்தில் ஆயத்த ஆடை தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இங்கு பயின்றவர்கள் மூலம் சிறுதொழில் தொகுப்பு மையத்தில் தொழில் மேம்பாட்டுக்காக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் தனியார் நிறுவனத்திற்கு தேவையான ஆயத்த ஆடைகளை எண்ணிக்கைக்கு தகுந்த கூலி அடிப்படையில் தைத்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது'' என்றார்.

சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை, மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் மல்லிகா, கவிதா, சாமதுரை, சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜம், வட்டார இயக்க மேலாளர் சொர்ணாதேவி, பொட்டல் பஞ்சாயத்து தலைவர் மாரிசெல்வி, துணைத்தலைவர் அரிராம்சேட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்