சிவகிரி அருகே பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் திறப்பு
சிவகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.;
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார்-தளவாய்புரம் கிராம பஞ்சாயத்துக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். யூனியன் திட்டப்பிரிவு ஆணையாளர் ஜெயராமன், உள்ளார்-தளவாய்புரம் பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் நாச்சியார், சுப்பிரமணியத்தாய், இசக்கித்துரை, பேச்சியம்மாள், ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சண்முகையா, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.