ஊட்டச்சத்து மாத தொடக்க விழா

ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நடந்தது

Update: 2022-09-02 17:09 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரத்தசோகை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளிலும் இந்த வாகனத்தின் வாயிலாக தாய்மார்கள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஏற்படும் ரத்த சோகைக்கான விழிப்புணர்வு வாசகங்கள் ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக ஒளிபரப்பப்படவுள்ளது.இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ராஜேஸ்வரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சாந்தி, கிருத்திகா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், மைய பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்