புதிய மின்மாற்றி தொடக்க விழா

வேதாரண்யத்தில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நடந்தது.

Update: 2023-05-27 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம்- நாகை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி தொடக்க விழா நடந்தது. விழாவில் நாகை செயற்பொறியாளர் சேகர் கலந்து கொண்டு புதிய மின்மாற்றி தொடங்கி வைத்து பேசுகையில்,வேதாரண்யம் பிரிவில் அமைக்கப்பட்ட 266-வது மின்மாற்றி இது.. இதனால் குறைந்த மின்னழுத்தம் இருக்காது. தொடர்ந்து பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் வேதாரண்யம் 4 வீதிகளிலும் உள்ள பழைய மின்மாற்றிகளை மாற்றிவிட்டு 4 புதிய மின் மாற்றிகள் விரைவில் அமைக்கப்படும். இதேபோல் குறைந்த மின்னழுத்தம் உள்ள நெய் விளக்கு, மருதூர் வடக்கு பகுதியில் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார், உதவி பொறியாளர் அன்பரசு, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்