வாழக்கரையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா
கீழையூர் அருகே வாழக்கரையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
வேளாங்கண்ணி:
திருக்குவளை வட்டம் வாழக்கரையில் கூட்டுறவு துறை சார்பில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ரேஷன் கடையை செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்தார். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்அருளரசு, வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, வாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.