புதிய ரேஷன் கடை திறப்பு விழா

ஜோலார்பேட்டை அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-12-08 17:52 GMT

ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஒன்றியம் வெங்காயப்பள்ளி ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க அருகாமையில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கி வந்தனர். இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று உணவு பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜிடம் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அவர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டு ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அமலோற்பவம் தோமினிக் வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரா, கூட்டுறவு சங்கத் தலைவர் எ.வி.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொருட்கள் வழங்கினார். துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்