புதிய ரேஷன்கடை திறப்பு விழா

வாசுதேவநல்லூர் அருகே புதிய ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது

Update: 2022-09-19 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேசியம்பட்டி என்ற நாரணபுரம் ஊராட்சியில் உள்ள ஏமன்பட்டி கிராம மக்களுக்கு செயல்பட்டு வந்த ரேஷன் கடையை தங்களது கிராமத்திலேயே கடை அமைத்து தர வேண்டும் என வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.சதன் திருமலைகுமார் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்.முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தேசியம்பட்டி என்ற நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், துணை தலைவர் திருமேனி, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ஏமன்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் பாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்