மானூரில் ரூ.1.2 கோடியில் புதிய போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு

மானூரில் ரூ.1.2 கோடியில் கட்டப்பட்ட புதிய போலீஸ் நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2022-12-30 20:20 GMT

மானூர்:

மானூர் போலீஸ் நிலையத்திற்கு ரூ.1.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நெல்லை புறநகர் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலையில், மறைந்த மானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் என்பவருடைய மனைவி மல்லிகா 'ரிப்பன்' வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பழனி, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், ஒன்றிய தி.மு.க. செயலாளா் அன்பழகன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்