இரும்பேடு துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு

இரும்பேடு கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு திறந்து வைத்தனர்.

Update: 2023-07-18 09:38 GMT

ஆரணி

இரும்பேடு கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு திறந்து வைத்தனர்.

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சியில் துணை சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கட்டிடங்கள் பழுதடைந்திருந்தன. இதனையடுத்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஜவ்வாது மலையில் நேற்று நடந்த கோடை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் காணொலி காட்சி மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். கலெக்டர் ப.முருகேஷ் தலைமை தாங்கினார்.

அப்போது இரும்பேடு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் தரணி வெங்கட்ராமன் குத்துவிளக்கேற்றி னார். நிகழ்ச்சியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேம்நாத் வரவேற்றார்.

திறப்பு விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வெங்கட்ராமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சமுதாய சுகாதார செவிலியர் காஞ்சனா, மருத்துவர் அல்லாத மேற்பார்வையாளர் அருளரசு, மருத்துவமனை செவிலியர் சத்யகலா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்