புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா அரசு பள்ளியில் நடைபெற்றது.
திருப்புவனம்
திருப்புவனத்தில் உள்ள வடக்கு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம், தொடர்ந்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழாவும் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமை தாங்கினார்.
விழாவில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட வயது வந்தோர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி, பால்பாண்டி ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு), ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார்.