நாராயணசாமி கோவில் திறப்பு விழா
தெற்கு மாவடி நாராயணசாமி கோவில் திறப்பு விழா நடந்தது.
ஏர்வாடி:
ஏர்வாடி அருேக தெற்கு மாவடியில் பழமைவாய்ந்த நாராயணசாமி கோவில் கலைநயம் மாறாமல் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவடி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிறுவனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கோவிலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம், பணிவிடை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் அகில திரட்டு திருஏடு வாசித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 8-ம் நாளான 10-ந்தேதி திருக்கல்யாணம், 10-ம் நாளான 12-ந்தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது.