அரசு கல்லூரியில் மேலாண்மை மன்றம் தொடக்க விழா
புத்தூர் அரசு கல்லூரியில் மேலாண்மை மன்றம் தொடக்க விழா
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது விழாவிற்கு வணிக நிர்வாகவியல் துறை தலைவர் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் முரளிகுமரன் வரவேற்றார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் பிரகதீஸ்வரன் கலந்து பேசினார். இதில் வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி, பிற துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சுனிதா நன்றி கூறினார்.