கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி திறப்பு விழா

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-02-23 19:45 GMT

அரியலூர் நகரில் பிரசித்தி பெற்ற கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியின் நான்காவது கிளை திறப்பு விழா செந்துறை சாலையில் உள்ள ரவுண்டானா அருகில் நடந்தது. விழாவிற்கு வந்த அனைவரையும் உரிமையாளர் ஏ.ஆர்.அமுதன் மற்றும் அவரது மனைவி துஷா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து விநாயகர் பூஜை நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்ட அறங்காவலரும், ஐயங்கார் பேக்கரி உரிமையாளருமான சிவலிங்கம், தஞ்சாவூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாண்டு ரெங்கன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்கள். அதன் பிறகு விற்பனை தொடக்க விழா நடந்தது. அரியலூர் ரஜாக் டிரேடிங் கம்பெனி தலைவர் அல்ஹாஜி அக்பர் ஷரீஃப் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதனை எம்.எம்.மண்டி முருகேசன் பெற்றுக்கொண்டார். நகர வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம், டாக்டர்கள் அகமதுரபி, மதன்குமார், செந்தில்நாதன், விஷால் கார்டன் கிருஷ்ணகுமார், தண்டபாணி ஜுவல்லரி பரமசிவம், டெல்லி ராஜ், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்