ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய தொகுப்பு மையம் திறப்பு

ஆலங்குளம் அருகே காவலாகுறிச்சி பஞ்சாயத்தில் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய தொகுப்பு மையம் திறக்கப்பட்டது.

Update: 2022-11-30 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே காவலாகுறிச்சி பஞ்சாயத்து வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய தொகுப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் மாலதி சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய தொகுப்பின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்து சிறுகுறு விவசாயிகளுக்கு விதை, உரம், இயற்கை பூச்சி மருந்து, விவசாய இடுபொருள், மண் புழு உரம், களை எடுக்கும் கருவி, மருந்து தெளிப்பான், ஆகியவற்றை குறைந்த விலையில் அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்த படுகிறது. மேலும் 100 பெண்களுக்கு கனரா வங்கி மூலம் மாடு வாங்குவதற்காக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

விழாவில் தென்காசி மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், உதவி அலுவலர் சிவகுமார், மாவட்ட வள பயிற்றுனர் மகளிர் திட்டம் செல்வராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, வட்டார இயக்க மேலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், அரசு ஒப்பந்ததாரர் காவலாகுறிச்சி செல்வராஜ் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்